Financial & Credit Analysis Mastery in Tamil (தமிழில்)
Financial & Credit Analysis Mastery in Tamil (தமிழில்)
நீங்கள் வங்கியிலோ (Bank Executive) அல்லது நிதி துறையிலோ (Finance Executive) வேலை பார்ப்பவரா? அல்லது நிதி வல்லுநர் (Financial Consultant) ஆக சுய தொழில் செய்பவரா?
நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis), பணப் புழக்கம் (Cash Flow Analysis) மற்றும் நிதிப் பாய்வு பகுப்பாய்வு (Fund Flow Analysis) போன்ற விஷயங்களில் உங்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறதா?
பணி மூலதன கருத்து மற்றும் மதிப்பீடு (Working Capital Concept and Assessment) என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா?
நீண்ட கால கடன் எப்படி மதிப்பிடு (Term Loan Assessment) செய்வது என்று தெரியவில்லையா? நீண்ட கால கடன் மதிப்பீடு தொடர்பான முக்கியமான விகிதங்களைப் (DSCR, FOIR, Margin of Safefy, Break Even Analysis, Sensitivity Analysis, etc.) புரிந்துகொள்வதில் சிரமத்தை எதிர்கொள்கிறீர்களா?
அப்படி என்றால் இந்த ஆன்லைன் கோர்ஸ் உங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
Financial & Credit Analysis Mastery Course in Tamil. (தமிழில் நிதி மற்றும் கடன் பகுப்பாய்வைக் கற்றுக்கொள்ளுங்கள்)
இந்த ஆன்லைன் கோர்ஸ் மூலமாக கடன் பகுப்பாய்வு (Credit Analysis) மற்றும் நிதி பகுப்பாய்வு (Financial Analysis) என்னும் உயர்ந்த திறமைகளை நீங்கள் கற்றுக்கொள்ள முடியும்.
கடன் பகுப்பாய்வு என்றால் என்ன?
கடன் பகுப்பாய்வு என்பது ஒரு நிறுவனம் அல்லது நபரின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திறனைத் தீர்மானிக்கும் செயல்முறையாகும்.
நிதி பகுப்பாய்வு என்றால் என்ன?
நிதி அறிக்கை பகுப்பாய்வு என்பது முடிவெடுக்கும் நோக்கங்களுக்காக ஒரு நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை பகுப்பாய்வு செய்யும் செயல்முறையாகும்.
இதனால் உங்களால் மிகவும் தன்னம்பிக்கையோடு உங்களுடைய வங்கி மற்றும் நிதி சம்பந்தப்பட்ட வேலையில் செயல்பட முடியும். அது உங்களுக்கு மிகுந்த உத்வேகத்தையும் உங்களுடைய வேலையில் உயர்வதற்கான பாதையையும் உண்டாக்கித் தரும்.
நான் வங்கியில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டும் சார்ட்டட் அக்கவுண்டன்ட் ஆக பல வருடம் பணி புரிந்த அனுபவத்தைக் கொண்டும் இந்த ஆன்லைன் கோர்ஸ் இன் பாடநெறிகளை உருவாக்கியுள்ளேன்.
இந்த பாடத்திட்டத்தில் பின்வரும் தலைப்புகள் விவாதிக்கப்படும்:
1) கடன் பகுப்பாய்வு (Credit Analysis)
2) நிதி விகித பகுப்பாய்வு (Financial Ratio Analysis)
3) பணப்புழக்க பகுப்பாய்வு (Cash Flow Analysis)
4) நிதி ஓட்டம் பகுப்பாய்வு (Fund Flow Analysis)
5) பணி மூலதனம் (Working Capital)
6) நிதியல்லாத கடன் வசதிகள் (Non Fund Based Credit Facilities)
இந்த பாடம் சுய வேகக் கற்றல் பாணியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தை எடுப்பதற்கு, கம்ப்யூட்டர் / மொபைல் ஃபோன் மூலம் நல்ல இணைய இணைப்பு தேவை. திறம்பட இந்த பாடத்திட்டத்தை கேட்க, நான் உங்கள் ஹெட்ஃபோனை பயன்படுத்த பரிந்துரைக்கிறேன்.
மீண்டும் இந்த பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.
உங்களுக்கு கடன் (Credit) மற்றும் நிதி பகுப்பாய்வு (Financial Analysis) கற்பிக்க தமிழில் உள்ள ஒரே பாடநெறி
Url: View Details
What you will learn
- கடன் பகுப்பாய்வு என்றால் என்ன?
- நிதி பகுப்பாய்வு என்றால் என்ன?
- நிதி விகித பகுப்பாய்வு
Rating: 5
Level: All Levels
Duration: 11 hours
Instructor: Raja Natarajan, B.Com., PGDBA, FCA
Courses By: 0-9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
About US
The display of third-party trademarks and trade names on this site does not necessarily indicate any affiliation or endorsement of hugecourses.com.
View Sitemap